செய்திகள்

தென்னாப்பிரிக்க தொடர்: ரோஹித், ராகுல், சூர்யகுமார் தலைமையில் 3 அணிகள்

டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணிகளை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது.  

DIN

டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணிகளை பிசிசிஐ வியாழக்கிழமை அறிவித்தது. 
இதில் ரோஹித் சர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் 16 பேரும், கே.எல்.ராகுல் தலைமையிலான ஒருநாள் அணியில் 16 பேரும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் 17 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி, அஸ்வின் உள்ளிட்ட வழக்கமான மூத்த வீரர்களுடன், கெய்க்வாட், ஜெய்ஸ்வால், பிரசித் போன்ற இளம் வீரர்களும் உள்ளனர். 
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ரோஹித், கோலி இல்லை. ஜடேஜா மட்டும் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாட இருக்கிறார். கடந்த சில காலமாக காத்திருந்த விக்கெட் கீப்பர் - பேட்டர் சஞ்சு சாம்சன், ஒருநாள் தொடருக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார், ஜிதேஷ் சர்மா ஆகிய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அந்தத் தொடருக்கான இந்திய "ஏ' அணியும் கே.எஸ். பரத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி முதலில், டி20 தொடரிலும் (டிச.10, 12, 14), பின்னர் ஒருநாள் தொடரிலும் (டிச.17, 19, 21) விளையாடுகிறது. இறுதியாக டெஸ்ட் தொடரில் (டிச.26 - 30, ஜன.3 - 7) களம் காண்கிறது.

டெஸ்ட்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷண், கே.எல்.ராகுல், 
ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

ஒருநாள்
கே.எல்.ராகுல் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் பட்டிதார், ரிங்கு சிங், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹர்.

டி20
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷண், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சஹர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT