செய்திகள்

உலகக் கோப்பை: நியூசிலாந்துக்கு 283 ரன்கள் இலக்கு!

DIN

உலகக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் இன்று முதல் தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ்  வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் மலன் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினர். இந்த இணை சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், டேவிட் மலன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், ஜோ ரூட் களமிறங்கினார். பேர்ஸ்டோ 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கியவர்களில் ஹாரி ப்ரூக் (25 ரன்கள்), மொயின் அலி (11 ரன்கள்), ஜோஸ் பட்லர் (43 ரன்கள்), லியம் லிவிங்ஸ்டன் (20 ரன்கள்) எடுத்தனர். களமிறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 86 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 282  ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு  விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: யார் இந்த யோன் ஃபோஸ்ஸ?

283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT