செய்திகள்

ஆசிய கபடி போட்டி - ஆடவர், மகளிர் அணிகள் தங்கம் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு ஆண்கள் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.  

DIN

ஆசிய விளையாட்டு ஆடவர் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா அணி, ஈரானை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழத்தி இந்திய அணி தங்கம் வென்றது.

சுமார் அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட பின் மீண்டும் தொடங்கிய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. முன்னதாக ஆசிய விளையாட்டு மகளிர் கபடி போட்டியிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

மகளிர் கபடி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 26-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழத்தி இந்திய அணி தங்கம் வென்றது. நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 28 தங்கம், 37 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் தொடர்ந்து பதக்கப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT