செய்திகள்

ரச்சின் ரவீந்திரா போல நான் சிக்ஸர்கள் அடித்ததில்லை:  ராகுல் திராவிட்

பிரபல நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா குறித்து ராகுல் திராவிட் கூறியது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார். 

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட்டின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து  ‘ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ‘ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார். 

இலையில் இது குறித்து இந்தியாவின் பயிற்சியாளர் ராகுல் திராவிட், “எனது பெயரையும் சச்சின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். நான் ஒருபோதும் அப்படி சிக்ஸர்கள் அடித்ததில்லை. ஒருவேளை சச்சினின் பெயர் அவருக்கு உதவியிருக்கலாம்” என கலகலப்பாக கூறியுள்ளார். 

ராகுல் திராவிட்டின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை மீண்டும் குறைந்தது! இன்றைய நிலவரம்!

கவரைப்பேட்டையில் ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு! நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது பாக்.!

கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல்!

பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்! டிரம்ப்

SCROLL FOR NEXT