செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி சதம்: அதிக சிக்ஸர்கள் அடித்த குசால் மெண்டிஸ்! 

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் குசால் மெண்டிஸ். 

DIN

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. குசால் பெராரே டக்கவுட் ஆக நிசாங்கா குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்கள். நிசாங்கா 51 ரன்களில் ஆட்டமிழக்க மெண்டிஸ் சதீராவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடி வந்தார். 

தென்னாப்பிரிக்கவுடன் ஆடிய முதல் போட்டியில் 42 பந்துகளுக்கு 76 ரன்கள் அடித்து அசத்தினார். அந்தப் போட்டியில் 8 சிக்ஸர்கள் அடித்தார். 

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 சிக்ஸர்கள் 14 பவுண்டரிகளுடன் 65 பந்தில் சதத்தினை நிறைவு செய்தார். 28.5 ஓவர் முடிவில் இலங்கை அணி 218/3 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 122  ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சதீரா 36* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 14 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார் குசால் மெண்டிஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT