செய்திகள்

முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவதில்லை: ஜஸ்பிரித் பும்ரா

முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவதில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

DIN

முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவதில்லை என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பைத் தொடரில் இது இந்திய அணியின் இரண்டாவது வெற்றியாகும். இந்தப் போட்டியில் பேட்டிங்குக்கு சிறந்த மைதனாமாக இருந்தாலும், தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 10 ஓவர்கள் வீசிய அவர் வெறும் 39 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த நிலையில், முடிவுகளை எதிர்பார்த்து நான் பந்துவீசுவதில்லை என ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: நான் முடிவுகளை எதிர்பார்த்து பந்துவீசுவதில்லை. 4 விக்கெட்டுகளை எடுத்து விட்டதால் மட்டும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று அர்த்தமாகது. 4 விக்கெட்டுகளை எடுத்ததால் நான் பெரிதாக எதனையும் சாதித்து விட்டேன் என்றும் கிடையாது. நான் தொடர்ந்து எனது பந்துவீச்சில் கவனம் செலுத்துகிறேன். நான் சிறப்பாக பந்துவீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதுதான் மிகவும் முக்கியம். நான் விக்கெட்டுகள் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப பந்துவீசுகிறேன். அது எனக்கு கை கொடுக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT