நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, வங்கதேசம் முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தன்சித் ஹாசன் களமிறங்கினர். லிட்டன் தாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தன்சித் ஹாசன் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய மெஹிதி ஹாசன் மிராஸ் 30 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிகூர் ரஹீம் அணியை சரிவிலிருந்து ஓரளவுக்கு மீட்டனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருப்பினும், ஷகிப் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹீம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 75 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் மஹ்மதுல்லா தவிர மற்றவர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. மஹ்மதுல்லா 49 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இதையும் படிக்க: சையது முஷ்டாக் அலி கோப்பை: கேரள கேப்டன் சஞ்சு சாம்சன்
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் லாகி ஃபெர்க்யூசன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிரெண்ட் போல்ட் மற்றும் மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.