செய்திகள்

உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா அல்லது பிசிசிஐ நடத்துகிறதா?: பாக். அணியின் இயக்குநர் கேள்வி! 

நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து பலரும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். 

DIN

உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மிகவும் எதிர்பார்த்த இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ந்து 8-0 முறை பாகிஸ்தானை உலகக் கோப்பையில் வீழ்த்தியுள்ளது. 

இந்தப் போட்டி பல வகைகளிலும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகின்றன. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிக மிக குறைவான டிக்கெட்டுகளே விற்பனை செய்யப்பட்டுள்ளது. விசா உள்ளிட்ட் பல பிரச்னைகள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

நேற்றையை போட்டியில் பாக். வீரர்கள் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பும்போது இந்திய ரசிகர்கள், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிட்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது. இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

போட்டி முடிந்தப்பிறகு பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் கூறியதாவது: 

பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் இந்தியாவுக்குதான் அதிகமான ஆதரவு இருந்தது. இது ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை மாறாக பிசிசிஐ நடத்தும் இருதரப்பு கிரிக்கெட் போட்டி போல இருந்தது. 

ஒருமுறைக்கூட தில் தில் பாகிஸ்தான் என்ற வாசகம் ஒலிப் பெருக்கியில் ஒலிக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தக் காரணத்துக்காக மட்டுமே பாகிஸ்தான் அணி தோற்கவில்லை. அதேவேளையில், இது நிச்சயமாக ஐசிசி நடத்தும் போட்டியாக இல்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. மேலும் இது குறித்து பேசி அபாரதம் பெற விரும்பவில்லை எனக் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT