செய்திகள்

இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

DIN

இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில்  மும்பை வான்கடே மைதானத்தில்  நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இது இங்கிலாந்தின் மூன்றாவது தோல்வி இதுவாகும்.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது: இங்கிலாந்து தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்து  வருகிறார்கள். இங்கிலாந்து அணியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று மாற்றங்கள் அவர்கள் வழக்கமாக விளையாடுவதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், டாஸ் வென்ற பிறகு இங்கிலாந்து எடுத்த முடிவு எனக்குப் பிடிக்கவில்லை.இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து தரமான ஆட்டத்தைக் கொடுக்கத் தவறி விட்டது. உலகக் கோப்பைக்கான போட்டியில் நிலைத்திருக்க இங்கிலாந்து அணிக்கு 7  வெற்றிகள் வேண்டும். ஆனால், இங்கிலாந்து அந்த நிலையில் தற்போது இல்லை. இனிவரும் போட்டிகளில் இங்கிலாந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இங்கிலாந்து அணி நம்பிக்கையின்றி இருப்பது போல  தோன்றுகிறது என்றார்.

இங்கிலாந்து தனது அடுத்தடுத்தப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT