செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

DIN

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று  வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இமாம் உல் ஹக் 17  ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், அப்துல்லா சஃபீக் மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா சஃபீக் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் களமிறங்கியவர்களில் முகமது ரிஸ்வான் (8 ரன்கள்), சௌத் ஷகீல் (25 ரன்கள்), ஷதாப் கான் (40 ரன்கள்), இஃப்திகார் அகமது (40 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன்  பாபர் அசாம் 92 பந்துகளில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 7  விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும், முகமது நபி மற்றும் அஸ்மதுல்லா ஓமர்சாய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT