சுக்விந்தர் சிங் சுக்கு, விராட் கோலி 
செய்திகள்

ஹிமாசல் முதல்வருடன் விராட் கோலி சந்திப்பு

ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேரில் சந்தித்துள்ளார்.

DIN

ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்குவை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேரில் சந்தித்துள்ளார்.

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.

இந்த நிலையில், ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங்கை நேரில் சென்று விராட் கோலி சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சுக்விந்தர் சிங், “இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தர்மசாலாவில் சந்தித்தேன். கிரிக்கெட் குறித்து இருவரும் விவாதித்தோம். தர்மசாலா மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அதிரடிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தர்மசாலாவில் நியூசிலாந்து அணி வீரர்கள்  தலாய் லாமாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT