செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்தியாவுக்குப் புதிய பயிற்சியாளரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. 

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த ஒரு வாரத்துக்குள் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பைத் தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான பதவிக்காலம் முடிவடைகிறது.  ராகுல் டிராவிட் மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ கோரிக்கை வைக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக யார் செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட்  ஓய்வு எடுக்க விரும்பினால் அந்த பொறுப்பில் இந்திய அணியை வழிநடத்த வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் எப்போதும் தயாராக இருக்கிறார்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் டிராவிட் மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்காதபட்சத்தில் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் அந்தப் பதவிக்கு வலுவான போட்டியாளராக பார்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT