செய்திகள்

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ரன் அவுட் குறித்து மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

2019 ஆம் ஆண்டு உலகக்  கோப்பையில் ரன் அவுட் ஆனது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

DIN

2019 ஆம் ஆண்டு உலகக்  கோப்பையில் ரன் அவுட் ஆனது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ரன் அவுட்டை யாராலும் மறக்க முடியாது. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆனவுடன் இந்திய ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். அந்தப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக் கோப்பையை விட்டு வெளியேறி இருக்கும். அதன்பின், மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக களமிறங்கவில்லை. ஓராண்டுக்குப் பின் அவர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்திருப்பார்.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு உலகக்  கோப்பையில் ரன் அவுட் ஆனது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தோனி தனது ரன் அவுட் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆட்டத்தின் முடிவு மிக நெருக்கமாக இருக்கையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். குறிப்பாக, போட்டியில் தோல்விடையும்போது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது கடினம். என் மனதுக்குள் நான் கூறிக்  கொண்டேன். ஓராண்டுக்குப் பிறகு ஓய்வு முடிவை அறிவித்திருந்தாலும், நாம் ரன் அவுட் ஆன தினமே நான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி தினம். உண்மையில் நான் ரன் அவுட் ஆன தினமே ஓய்வு பெற்றுவிட்டேன். நாட்டில் பலர் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. எந்த விளையாட்டாக இருந்தாலும் நீங்கள் உங்களது நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். காமன்வெல்த் அல்லது ஒலிம்பிக் அல்லது ஐசிசி போட்டிகளை எடுத்துக் கொண்டாலும் நாம் நமது நாட்டுக்காக விளையாடுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!

ரூ.58,100 சம்பளத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரப்பெற்றோம் (03-09-2025)

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

SCROLL FOR NEXT