இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
இங்கிலாந்து எதிராக முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து எதிராக முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்தியா விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா!
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 101 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் சூர்யகுமார் யாதவைத் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் 47 பந்துகளில் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: இலங்கைக்கு சிக்கல்: காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்!
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லே 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.