செய்திகள்

இலங்கைக்கு சிக்கல்: காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர்!

காயம் காரணமாக இலங்கை வீரர் லகிரு குமாரா உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

DIN

காயம் காரணமாக இலங்கை வீரர் லகிரு குமாரா உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடர் இலங்கை அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. தொடக்கப் போட்டிகளில் தொடர்ச்சியாக இலங்கை அணி தோல்விகளை சந்தித்தது. ஆனால், கடந்த இரண்டு போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்று  உலகக் கோப்பையில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த நிலையில், இலங்கை அணியின் லகிரு குமாரா காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. லகிரு குமாரா இங்கிலாந்துக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அந்தப் போட்டியில் இலங்கை 8  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

லகிரு குமாராவுக்குப் பதிலாக இலங்கை அணியில் மூத்த வீரரான சமீரா துஷ்மந்தா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடரில்  இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை 2  போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று ஜி.கே.மூப்பனாா் நினைவு நாள்: நிா்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு

அதிமுக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து

புது தில்லி முனிசிபல் கவுன்சில் சாா்பாக தியான மையங்கள் திறப்பு

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT