படம்: எக்ஸ் | ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 
செய்திகள்

100வது போட்டியில் ரஷித் கான்! 

உலகக் கோப்பையின் லீக் போட்டியின் 30வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன.

DIN

உலகக் கோப்பையின் லீக் போட்டியின் 30வது போட்டியில் ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 

புள்ளிப்பட்டியலில் 5,7வது இடத்தில் முறையே இருக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுவதால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கிறது. 

ஒருநாள் போட்டிகளில் ரஷித் கான் 100வது போட்டியாக இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 25 வயதான ரஷித் கான் உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்ச்சாளராக அறியப்படுகிறார். 94 இன்னிங்ஸில் 178 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

5 விக்கெட்டுகளை 4 முறையும் சிறந்த பௌலிங் சாதனையாக 7/18 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எக்கானமி 4.25இல் பந்து வீசக்கூடியவர்.

இந்த 100வது போட்டியில் எத்தனை விக்கெட்டுகள் எடுப்பார் என பொருத்திருந்து பார்போம். பௌலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்தும் ரஷித் கான் சிறந்த ஆல் ரவுண்டராக ஆப்கானிஸ்தான் அணிக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

13 ஓவர் முடிவில் இலங்கை அணி 58/1 ரன்கள் எடுத்துள்ளது. பதும் நிஷாங்கா - 36*, குசால் மெண்டிஸ் - 6*. திமுத் கருணாரத்னே 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT