செய்திகள்

இந்திய அணியின் முதுகெலும்பு விராட்: பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் 

இந்திய அணியின் முதுகெலும்பு விராட் கோலி என்று பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் முதுகெலும்பு விராட் கோலி என்று பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆட்டத்திற்குப் பிறகு, பிசிபி-க்கு அவர் அளித்த பேட்டியில், விராத் கோலி விக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமானது. அவர், இந்திய அணியின் முதுகெலும்பு, சேனலில் பந்துவீசுவது எங்கள் திட்டம் மற்றும் அது பலனளித்தது. பெரிய பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு, ஹர்திக் பாண்டியாவின் விக்கெட் அந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது. போட்டியின், முடிவு எங்கள் கையில் இருந்தது, ஆனால் வானிலையை எதுவும் செய்ய முடியாது. 

ஒட்டுமொத்தமாக, எங்கள் செயல்திறன் நன்றாக இருந்தது என்று அவர் கூறினார். இதனிடையே, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷகின் அஃப்ரிடி, ரோஹித் சர்மாவுக்கு வீசிய பந்தால் மிரண்டு போன விராட் கோலியின் ரியாக்சன் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆசியக் கோப்பை தொடரில் நேற்று (செப்டம்பர் 2) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி பேட்டிங் செய்யும்போது இடையிடையே மழை குறுக்கிட்டது.  பின்னர், போட்டி தொடங்கப்பட்டு இந்திய அணி தனது இன்னிங்ஸை விளையாடி முடித்தது. பாகிஸ்தான் களமிறங்குவதற்கு முன்பு மீண்டும் மழை தொடர்ந்தது. 

மழை அதிகமானதால் போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷகின் அஃப்ரிடி 4  விக்கெட்டுகளையும், ஹாரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT