செய்திகள்

உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாகவே ஓய்வு முடிவை அறிவித்த பிரபல தென்னாப்பிரிக்க வீரர்!

உலகக் கோப்பை தொடருக்குப் பின் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் ஒருநாள் போட்டிகளில் இருந்து  ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உலகக் கோப்பை தொடருக்குப் பின் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் ஒருநாள் போட்டிகளில் இருந்து  ஓய்வுபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் இருந்து டி காக் ஓய்வு பெற உள்ள முடிவை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான எக்ஸ் வலைதளப் பதிவில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து டி-காக் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம் வெளியான சில நிமிடங்களில் தனது ஓய்வு முடிவை டி-காக் அறிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் டி-காக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

தென்னாப்பிரிக்காவுக்காக 140 ஒருநாள் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 5,966 ரன்கள் மற்றும் 2,277 ரன்கள் முறையே குவித்துள்ளார். 

உலகக் கோப்பை போட்டிகள் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT