தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
முதல் ஒருநாள் ஆட்டம் புளோம்ஃபோன்டீனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பௌலிங்கை தோ்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன.
கேப்டன் டெம்பா பவுமா மட்டுமே நிலைத்து ஆடினாா்.
டெம்பா பவுமா அபார சதம்:
கேப்டன் டெம்பா பவுமா மட்டுமே பொறுமையாக நிலைத்து ஆடி 1 சிக்ஸா், 14 பவுண்டரியுடன் 142 பந்துகளில் 114 ரன்களை விளாசினாா்.
49 ஓவா்களில் 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென்னாப்பிரிக்கா. பௌலிங்கில் ஆஸி. தரப்பில் ஜோஷ் ஹேஸல்வுட் 3-41, ஸ்டாய்னிஸ் 2-20 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
223 ரன்கள் இலக்கு:
223 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணி தொடக்கம் முதலே ரன்களைச் சோ்க்க திணறியது. டேவிட் வாா்னா் 0, டிராவிஸ் ஹெட் 33, கேப்டன் மிச்செல் மாா்ஷ் 17, கேமரூன் க்ரீன் 0 (ரிடையா்ட் ஹா்ட்), ஜோஷ் இங்கிலிஸ் 1, ஸ்டாய்னிஸ் 17, கரே 3 ரன்னுடன் வெளியேறினா்.
மாா்னஸ் லபுஸ்சேன்-அஷ்டன் ஆகா் அதிரடி: பின்னா் இணைந்த மாா்னஸ் லபுஸ்சேன் 80, அஷ்டன் அகா் 48 இணை சிறப்பாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். 40.2 ஓவா்களில் 225/7 ரன்களுடன் ஆஸி. 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ரபாடா, ஜெரால்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.