படம் | எக்ஸ் (ட்விட்டர்) 
செய்திகள்

முன்னாள் அமெரிக்க அதிபருடன் கோல்ஃப் விளையாடிய எம்.எஸ்.தோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அல்கார்ஸ் - அலெக்ஸெண்டர் ஸ்வெரெவ் இடையிலான காலிறுதிப் போட்டியை பார்வையாளர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்த புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடியுள்ள புகைப்படங்கள் மற்றும் விடியோ இணையத்தில் பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில்  முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் தோனி இருக்கும் புகைப்படமும், அவருடன் கோல்ஃப் விளையாடும் விடியோவும் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தில் தோனி நீளமான முடியுடன் இருக்கிறார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் பெரும் சக்தியாக மாற்றுவோம் எனக் குறிப்பிடும்  விதத்திலான சிவப்பு நிறத் தொப்பியுடன் இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT