செய்திகள்

யுஎஸ் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

DIN

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாமான யுஎஸ் ஓபன் நியூயாா்க்கில் நடைபெற்று வந்தது. அதில் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜாம்பவான் ஜோகோவிச்-ரஷியாவின் டெனில் மேத்வதேவ் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை மோதினா். 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் ரஷியாவின் டெனில் மேத்வதேவை, ஜோகோவிச் வீழ்த்தினார். யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலக சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். 
ஜோகோவிக் இதுவரை 10 ஆஸ்திரேலிய ஓபன், 7 விம்பிள்டன், 4 யுஎஸ் ஓபன் மற்றும் 3 பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT