செய்திகள்

சிக்ஸருடன் 10,000 ரன்களை கடந்த ரோஹித் சர்மா! 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். 

DIN

248 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 241 இன்னிங்ஸில் 30 சதங்கள் 50 அரைசதங்களுடன் 10,000 ரன்களை அடித்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் அடித்தவரும் ரோஹித் சர்மாதான் (264) என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 முறை 200+ அடித்து சாதனை புரிந்துள்ளார். 

ஆசியக் கோப்பையில் ரோஹித் நேற்றே அடிக்க இருந்த 22 ரன்களை இன்றைய இலங்கைக்கு எதிரான போட்டியில் அடித்து அசத்தியுள்ளார்.  ரஜிதா வீசிய ஓவரில் சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். தற்போது 51வது அரைசதத்தினை கடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

10 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 6வது நபராகவும் உலக அளவில் 15வது நபராகவும் ரோஹித் சர்மா இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் போட்டிகளில்​ இந்தியாவில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்: 

  1. சச்சின் டெண்டுல்கர் - 18,426
  2. விராட் கோலி   - 13, 024 
  3. சௌரவ் கங்குலி -11, 221
  4. ராகுல் திராவிட் - 10,768
  5. எம்.எஸ்.தோனி -10, 599 
  6. ரோஹித் சர்மா- 10,001

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

SCROLL FOR NEXT