முதுகு பிடிப்பு காரணமாக ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியிலும் இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினர். பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் முதுகு பிடிப்பு காரணமாக இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறவில்லை. இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு முகுது பிடிப்பு சரியாகாத காரணத்தால் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியிலும் இடம்பெற மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நன்றாக உணர்கிறார். இருப்பினும், அவருக்கு முதுகு பிடிப்பு முழுமையாக இன்னும் சரியாகவில்லை. இந்திய அணியுடன் தற்போது அவர் இணைந்து விளையாடுவது கடினம் என மருத்துவக் குழு தெரிவித்தது. அதனால், அவர் இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் விளையாடவில்லை எனத் தெரிவித்துள்ளது.
காயம் காரணமாக முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு 6 மாதங்களுக்குப் பிறகு அண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.