செய்திகள்

ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்!

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார்.

DIN

தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியின்போது நசீம் ஷாவின் வலது தோளில் காயம் ஏற்பட்டது. அதனால், அவர் இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா  என்ற சந்தேகம் எழுந்தது. 

இந்த நிலையில், தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார். அதனால், இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியில் அவர் அணியில் இல்லாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது: ஆசியக் கோப்பை தொடரில்  நசீம் ஷாவுக்குப் பதிலாக 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் வலது கை வேகப் பந்துவீச்சாளர் ஸாமன் கான் இணைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இன்றையப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT