செய்திகள்

அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தரவரிசையில் முதலிடத்துக்கு  முன்னேறியுள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தரவரிசையில் முதலிடத்துக்கு  முன்னேறியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று (செப்டம்பர் 22) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் இரண்டாவது இடத்திலும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

டி20  மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் இருக்கும் நிலையில், தற்போது ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதல் இடம் பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணி அனைத்து வடிவிலான போட்டிகளின் தரவரிசையிலும் முதலிடம் பெற்றிருந்தது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 24) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT