நேபாளம் அணி(படம்: ட்விட்டர்) 
செய்திகள்

சர்வதேச டி20-ல் 314 ரன்கள்! நேபாளம் படைத்த உலக சாதனைகள் என்னென்ன?

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி நிகழ்த்தியுள்ளது.

DIN

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் பிரிவில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி நிகழ்த்தியுள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் குரூப் சுற்றில் மங்கோலியா அணியும், நேபாள அணியும் மோதின. டாஸ் வென்ற மங்கோலியா அணி பவுலிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 3 விக்கெட்டுகளை இழந்து 314 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மங்கோலியா 41 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சுமார் 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேபாள அணி சாதனை படைத்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த போட்டியில் பல்வேறு உலக சாதனைகளை நேபாள அணி படைத்துள்ளது.

  1. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் மற்றும் 300-க்கும் அதிகமான ரன்கள் அடித்த முதல் அணி.  
  2. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்(273) வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை.
  3. 34 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதமடித்த வீரராக குஷல் மல்லா சாதனை படைத்துள்ளார். முன்னதாக தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்தில் அடித்திருந்தார்.
  4. 9 பந்துகளில் அரைசதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரரானார் திபேந்திர சிங். இந்திய வீரர் யுவராஜ் சிங்கின்(12 பந்துகள்) சாதனை முறியடிக்கப்பட்டது.
  5. சர்வதேச டி20 போட்டியில் இரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்(26) அடித்த அணியாக நேபாளம் சாதனை.

அதுமட்டுமின்றி, நேபாள வீரர் சந்தீப் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல், இந்த போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.  

இந்த பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் நேரடியாக காலிறுதி போட்டியில் களம் காணவுள்ள நிலையில், குரூப் போட்டிகளில் முன்னிலை பெறும் 4 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

300 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!!

மோந்தா புயல்! 3,778 ஆந்திர கிராமங்களில் கனமழை: முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் மோந்தா புயல்! அறிய வேண்டிய 10 விஷயங்கள்!!

மோந்தா தீவிரப் புயல்: கடைகள், வணிக வளாகங்களை மூட புதுவை அரசு உத்தரவு!

சென்னைக்கு 2 வாரம் மழை இடைவேளை!

SCROLL FOR NEXT