செய்திகள்

டி-காக் அதிரடி: பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு

லெக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Manivannan.S

லெக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 15வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் டீகாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 20 ரன்களில் வெளியேற படிக்கல், மார்கஸ் என அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த நிகோலஸ் பூரன் 40 ரன்களை சேர்த்தார். டி-காக் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 81 ரன்களைக் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியில் மேக்ஸ் வெல் இரு விக்கெட்டுகளையும், டொப்ளே, யாஷ் தயாள், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகன்!

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

SCROLL FOR NEXT