டி20 உலகக் கோப்பையில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த டி காக்!
டி20 உலகக் கோப்பையில் டி காக் படைத்த சாதனை குறித்து...
டி20 உலகக் கோப்பையில் குவிண்டன் டி காக் அதிக ரன்கள் விளாசிய முதல் தென்னாப்பிரிக்க வீரராக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக, ஏபி டி வில்லியர்ஸ் முதலிடத்தில் இருந்தார். தற்போது வில்லியர்ஸை முந்தி டி காக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் 13ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 187/6 ரன்கள் குவித்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் தெ.ஆ. அணியின் தொடக்க வீரர் குவிண்டன் டி காக் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை முந்தி டி காக் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தெ.ஆ. வீரர்கள்
1. குவிண்டன் டி காக் - 737* ரன்கள்
2. எபி டி வில்லியர்ஸ் - 717 ரன்கள்
3. ஜேபி டுமினி - 568 ரன்கள்
4. டேவிட் மில்லர் - 462* ரன்கள்
5. எய்டன் மார்கரம் - 448 ரன்கள்*
(* - இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுபவர்கள்)
Quinton de Kock has become the first South African player to score the most runs in a T20 World Cup.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.