உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
மகளிர் அணி (ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் கூட்டணி) இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆடவர் அணி (அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ) நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றது.
Advertisement
Advertisement
காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ஜோதி சுரேகா கூட்டணி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.
நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதிக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் அவர் தனிநபர் பிரிவிலும் அரையிறுதிப் போட்டியில் விளையாடவிருக்கிறார்.
கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான வேட்டையிலும் பிரயன்ஷ் உள்ளார்.
ரீகா்வ் பதக்க சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா எதிர்பார்க்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.