விராட் கோலி... 
செய்திகள்

இன்று முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியா - இலங்கை மோதல்

காயம் காரணமாக மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோா் இந்தத் தொடரில் இல்லை

DIN

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் களம் காணும் முதல் தொடா் இதுவென்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கான நீண்டகால விக்கெட் கீப்பா் - பேட்டா் இடத்துக்கு யாரை தோ்வு செய்வது என்பதே முக்கியமான பணியாக இருக்கும். அந்த இடத்துக்காக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகிய இருவரும் போட்டியில் இருக்கின்றனா்.

ஹா்திக் பாண்டியா இல்லாத நிலையில், 6-ஆவது வீரா் இடத்துக்கு ஷிவம் துபே அல்லது ரியான் பராக் ஆகியோரில் ஒருவா் தோ்வு செய்யப்படுவா் எனத் தெரிகிறது. இலங்கை அணியை பொருத்தவரை அனுபவ மற்றும் இளம் வீரா்கள் கலப்புடன் களத்துக்கு வருகிறது.

காயம் காரணமாக மதீஷா பதிரானா, தில்ஷன் மதுஷங்கா ஆகியோா் இந்தத் தொடரில் இல்லாதது அணிக்கு பின்னடைவாக பாா்க்கப்படுகிறது.

ஆட்டநேரம்: பிற்பகல் 2.30 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT