அஸ்வின் அதிரடியால் முதல்முறையாக கோப்பையை வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ் படம்: டிஎன்பிஎல் / எக்ஸ்
செய்திகள்

டிஎன்பிஎல்: அஸ்வின் அதிரடியால் முதல்முறையாக கோப்பையை வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்!

டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

DIN

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கோவை கிங்ஸ் முதலில் பேட் செய்தது.

லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் அதிகபட்சமாக ராம் அரவிந்த் 27 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதீக் உர் ரஹ்மான் 25 ரன்களும், சுஜய் 22 ரன்களும் எடுத்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி மற்றும் விக்னேஷ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் அஸ்வின் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்து (52) ஆட்டமிழந்தார். உடன் பாபா இந்திரஜித் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சரத் குமார் 27 (15 பந்துகளில்) , பூபதி குமார் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இது திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் முதல் டிஎன்பிஎல் கோப்பை. இதற்கு முன்பாக 2018, 2019களில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் தொடர்ந்து 3 போட்டிகளில் அரைசதம் அடித்தது அசத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT