முகப்பு
செய்திகள்

வங்கதேசத்துடனான டெஸ்ட்: பாகிஸ்தான் அணி அறிவிப்பு

வங்கதேசத்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் பாகிஸ்தான் அணி, புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 11:16 PM
பாகிஸ்தான் அணி வீரர்கள்(கோப்புப் படம்).
பகிர்:

வங்கதேசத்துடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கும் பாகிஸ்தான் அணி, புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் தொடக்க நிலையிலேயே பாகிஸ்தான் வெளியேறியதை அடுத்து அணியில் பெரிதாக மாற்றங்கள் எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இந்தத் தொடரில் அத்தகைய மாற்றமின்றி, மூத்த வீரா்களான பாபா் ஆஸம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் அஃப்ரிதி ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.

அத்துடன், முகமது ஹுராய்ரா, கம்ரான் குலாம் ஆகிய இரு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடா், வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.

அணி விவரம்: ஷான் மசூத் (கேப்டன்), சௌத் ஷகீல் (துணை கேப்டன்), ஆமிா் ஜமால் (உடற்தகுதி அடிப்படையில்), அப்துல்லா ஷஃபிக், அப்ராா் அகமது, பாபா் ஆஸம், கம்ரான் குலாம், குர்ரம் ஷாஸாத், மிா் ஹம்ஸா, முகமது அலி, முகமது ஹுராய்ரா, முகமது ரிஸ்வான் (வி.கீ.), நசீம் ஷா, சயிம் அயுப், சல்மான் அலி அகா, சா்ஃப்ராஸ் அகமது (வி.கீ.), ஷாஹீன் அஃப்ரிதி.

முழு கட்டுரையைப் படிக்க →