வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்..!
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை!
வங்கதேசத்துடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, வங்கதேச வெளிவிவகார அமைச்சர் முகமது தௌஹித் ஹொசைனுடன் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தொலைபேசி வழியாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவைப் பேண இருதரப்பும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pakistan Foreign Minister Ishaq Dar on Sunday (January 25, 2026) talked to his Bangladeshi counterpart Mohammad Touhid Hossain and the two leaders reaffirmed their commitment to build closer ties in various fields, according to a statement by the Foreign Office.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.