கடைசி செஷனில் அதிரடி காட்டிய பாகிஸ்தான்..! இங்கிலாந்துக்கு 130 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் குறித்து...
எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் பரபரப்பாக முடிந்தது. இரண்டாம் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 449 ரன்கள் குவித்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து 453 ரன்கள் குவித்தது. அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஃபாலோ ஆன் ஆனதால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடர்ந்தது.
இங்கிலாந்து வீரர்களின் நம்பிக்கைக்கு மாறாக, யாருமே எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான கம்பேக் அளித்தது. ஷான் மசூத் 95, பாபர் அசாம் 76 ரன்கள் குவித்தார்கள்.
Advertisement
Advertisement
ரஸாவுல்லா அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர் 9 சிக்ஸர்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்ஷன் 3, டங், ராபின்சன், லாரன்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். ஆர்ச்சர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்.
ஏற்கெனவே தொடரை 2-0 என வென்றுள்ள இங்கிலாந்து, கடைசி டெஸ்ட்டிலும் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சிலும் கம்பேக் அளிக்கும் என இந்தப் போட்டி சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pakistan goes on the attack in the final session! Target of 130 runs set for England!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.