FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லீட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து 228 ரன்கள் முன்னிலை... பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 409 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

30 வினாடிகள் முன்பு
- Mike Egerton
பகிர்:

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 409 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றன. இவ்விரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லேயில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டங், ஆலி ராபின்சன் தலா 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement

Advertisement

அதைத்தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 82 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 91 (13 பௌண்டரிகள்), ஜோர்டான் 73 (14 பௌண்டரிகள்), ஜோ ரூட் (10 பௌண்டரிகள்) 66 ரன்கள் எடுத்தனர்.

பின்னர், மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 89.5 ஓவர்களில் 409 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசி கட்டத்தில் 23 ரன்கள் விளாசினார்.

பாகிஸ்தான் சார்பில் சுழல்பந்துவீச்சாளர் அலி உஸ்மான் 5 விக்கெட்டுகளும், குர்ரம் ஷேஷாத் 3 விக்கெட்டுகளும், அப்பாஸ், முகமது அலி இருவரும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணி தன்னுடைய இண்டாவது இன்னிங்ஸில் 223 ரன்கள் பின்தங்கிய நிலையில், ஆட்டம் தொடங்கியதுமே ரன்கள் ஏதுமின்றி பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அஸான் அவாய்ஸ் 9 ரன்களில் விக்கெட்டை இழக்க பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

summary

England are in a commanding position in the Leeds Test, holding a massive 195-run lead with two wickets in hand. Pakistan will need something extraordinary from their batters in the second innings to stay alive at Headingley.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments