படம் | பிசிசிஐ
செய்திகள்

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூடுதல் போட்டியில் விளையாடும் இந்திய அணி; காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடவுள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணி கூடுதலாக ஒரு போட்டியில் விளையாடவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக இருப்பதால் அதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதற்காக இரு அணிகளும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் பகலிரவு பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடவுள்ளனர். இந்தப் போட்டி பிங்க் பந்தில் நடைபெறும். இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டி, டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கும் இரண்டாவது பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளுக்கும் உதவியாக இருக்கும்.

இதற்கு முன்னதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியது. அதற்கு பின் தற்போது இரண்டாவது முறையாக இரு அணிகளும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி 30 ஆண்டுகளுக்கும் மேலாகின்றன. அதனால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் அட்டவணை

முதல் டெஸ்ட் - பெர்த் (நவம்பர் 22 - நவம்பர் 26)

இரண்டாவது டெஸ்ட் - அடிலெய்டு (டிசம்பர் 6 - டிசம்பர் 10) (பகலிரவு டெஸ்ட் போட்டி)

மூன்றாவது டெஸ்ட் - பிரிஸ்பேன் (டிசம்பர் 14 - டிசம்பர் 18)

நான்காவது டெஸ்ட் - மெல்போர்ன் (டிசம்பர் 26 - டிசம்பர் 30)

ஐந்தாவது டெஸ்ட் - சிட்னி (ஜனவரி 3 - ஜனவரி 7)

கூடுதல் போட்டி

இந்தியா - பிரைம் மினிஸ்டர்ஸ் 11 - கேன்பரா (நவம்பர் 30 - டிசம்பர் 1) (பகலிரவு டெஸ்ட் போட்டி)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT