ஈரோடு: சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், ஈரோட்டைச் சேர்ந்தவருமான ப.இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.
லாத்வியா நாட்டின் ரீகா நகரில், 13-ஆவது ரீகா டெக்னிக்கல் யுனிவர்சிட்டி சர்வதேச செஸ் போட்டி கடந்த 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் 24 நாடுகளைச் சேர்ந்த 240 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் பிளிட்ஸ் பிரிவில் பங்கேற்ற இனியன், சாம்பியன் பட்டம் வென்றார். 11 சுற்றுகளாக நடைபெற்ற இப்பிரிவில் அவர் 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
மற்றொரு இந்தியரும், சென்னையைச் சேர்ந்தவருமான ஏ.ஆர்.இளம்பரிதி 9 புள்ளிகளுடன் மூன்றாமிடம்பிடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.