அர்ஷத் நதீம் படம் |ஒலிம்பிக்ஸ் (எக்ஸ்)
செய்திகள்

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம் அரசுக்கு வைத்த கோரிக்கை!

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

கடைசியாக கடந்த 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதன் பின், பாகிஸ்தானுக்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் பாகிஸ்தானின் தங்கப் பதக்க தேடுதலை முடிவுக்கு கொண்டு வந்தார் அர்ஷத் நதீம். இறுதிப்போட்டியில் 92.97 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் சாதனை படைத்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் தடகள வீராங்கனைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளுக்குத் தேவையான நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், மிகப் பெரிய போட்டிகளில் அவர்களால் பல சாதனைகளை படைக்க முடியும் என அர்ஷத் நதீம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களது பகுதியில் உள்ள பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வசதிகள் தேவைப்படுகின்றன. பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களுக்கும் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகள் தேவைப்படுகின்றன. தற்போது உள்ள சூழலில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் பெரிய அளவில் சாதனைகள் படைக்க சிறந்த நவீன வசதிகள் தேவைப்படுகின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT