டிங் லிரென் - குகேஷ்.  படங்கள்: எக்ஸ் / ஃபிடே
செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 8-வது சுற்றும் டிராவில் முடிந்தது.

DIN

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.

செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வென்ற குகேஷ், நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடம் மோதும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார்.

14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.

மேலும் 4,5,6,7-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நடைபெற்ற 8ஆவது சுற்றில் குகேஷ் கறுப்பு நிற காய்களுடனும் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பினை தவறவிட்டார்கள். இறுதியில் 51ஆவது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடித்துக்கொண்டார்கள்.

4-4 என்ற புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருக்கிறார்கள். மீதம் 6 போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

"வரிகள் நீக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு!": Trump எச்சரிக்கை! | Tax | Federal Court of US

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் நாகேந்திரன்

26 ஆண்டுகளுக்குப் பின்..! இளைஞரின் நுரையீரலில் இருந்த பேனா மூடியை அகற்றிய மருத்துவர்கள்!

சீனாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT