ஆப்கன் மகளிர், ரஷித் கான் கோப்புப் படங்கள்.
செய்திகள்

ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு..! ரஷித் கான் விமர்சனம்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக இயற்றப்படவிருக்கும் கல்விக்கான தடை குறித்து ஆப்கன் கிரிக்கெட்டர் ரஷித் கான் விமர்சித்துள்ளார்.

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெண்களுக்கான மருத்துவ படிப்புகள் தடைவிதிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்தத் தடைக்கு பிரபல ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து ரஷித் கான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

இஸ்லாமிய கற்றலில் கல்வி என்பது முக்கியமான பங்கினை வகிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் கற்றல், ஆன்மிகத்தில் சமமான முக்கியத்துவத்தை குரான் வலியுறுத்துகிறது.

ஆப்கன் தாய்மார்கள், சகோதரிகளுக்கு சமீபத்தில் கல்வியை தடைசெய்தது மிகுந்த சோகத்தையும் வருத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவு வருங்கால தலைமுறைகளை மட்டுமல்லாமல் இது ஆப்கன் சமூகத்தையே பாதிக்கும்.

சமூக ஊடகங்களின்மூலம் அவர்கள் தெரிவிக்கும் வலியும் சோகமும் அவர்கள் எவ்வளவு போராட்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதனை காட்டுகிறது.

இந்த கடினமான நேரங்களில் எனதருமை ஆப்கன் மக்களே ஒற்றுமையாக இருங்கள். நமது நாட்டுக்கு அனைத்து துறைகளிலும் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். குறிப்பாக மருத்துவத் துறையில் செவிலியர்கள், பெண் மருத்துவர்கள் பற்றாக்குறைகள் இருக்கின்றன.

இது நேரடியாக மருத்துவதுறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பெண்களின் கண்ணியம் பாதிக்கப்படுகிறது. நமது சகோதரிகள், தாய்மார்களின் குறைகளை சரியாக புரிந்துகொள்ளும் பெண் மருத்துவர்கள் தேவை.

தலிபான் அரசின் இந்த முடிவை மாற்றுமாறு நான் கோரிக்கை வைக்கிறேன். ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது சமூக பொறுப்பு மட்டுமல்ல நமது நம்பிக்கை, மதிப்புகளுக்கு நியாயம் சேர்ப்பது கடமையாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

SCROLL FOR NEXT