உலக செஸ் சாம்பியன்ஷிப்: 11வது சுற்றில் குகேஷ் வெற்றி!
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும், லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11வது சுற்றில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்றார்.
நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடனான போட்டியில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய குகேஷ் 29வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், குகேஷ் 6 புள்ளிகளும் டிங் லிரென் 5 புள்ளிகளையும் பெற்றனர்.
Advertisement
Advertisement
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், 10வது சுற்று சமனில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று 11வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் குகேஷ் 6 புள்ளிகளும் லிரென் 5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.
இதுவரை நடைபெற்றுள்ள 11 சுற்றுகளில் முதல் சுற்றில் டிங் லிரென் வென்ற நிலையில், 3வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். எஞ்சிய போட்டிகள் சமனில் முடிந்தன.
14 சுற்றுகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் தொடரில், மீதமுள்ள 3 சுற்றுகள் சமனில் முடிந்தாலும் இந்திய வீரர் குகேஷ் உலக சாம்பியனாக வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.