செய்திகள்

பேஷ்பால் யுக்தியை எதிர்கொள்ள எங்களிடம் திட்டங்கள் உள்ளன: கே.எஸ்.பரத்

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை கையாள இந்திய அணியிடம் புதிய திட்டங்கள் இருப்பதாக இந்திய அணியின் கே.எஸ்.பரத் தெரிவித்துள்ளார். 

DIN

இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை கையாள இந்திய அணியிடம் புதிய திட்டங்கள் இருப்பதாக இந்திய அணியின் கே.எஸ்.பரத் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆலி போப் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிரடியாக 196 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறினார். 

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் பேஷ்பால் யுக்தியை கையாள இந்திய அணியிடம் புதிய திட்டங்கள் இருப்பதாக இந்திய அணியின் கே.எஸ்.பரத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இங்கிலாந்து வீரர் ஆலி போப் அதிரடியாக பல சிறப்பான ஷாட்டுகளை விளையாடினார். இந்திய அணி எவ்வாறு சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன. அதனை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் செயல்படுத்துவோம். ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாட போதுமான அளவு பயிற்சி மேற்கொண்டுள்ளோம். தேவைப்பட்டால் அதனை செயல்படுத்துவோம். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பும் நாங்கள் ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளோம். பேட்டிங் செய்யும்போது ஸ்வீப் ஷாட்டுகளை விளையாடுவது தனிப்பட்ட வீரரின் மனநிலையைப் பொறுத்து மாறுபடும் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் நிறுவன காவலருக்கு மிரட்டல்: சிறாா் உள்ளிட்ட 3 போ் கைது

இந்தியாவில் ரூ.9 லட்சம் கோடி முதலீடு: நாா்வே

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

போதைப்பொருள் கடத்தலில் தொடா்பு: இந்திய தொழில் நிறுவன அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து

SCROLL FOR NEXT