செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவர்: தென்னாப்பிரிக்க வீரர்

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

DIN

டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை டி20 தொடர் வருகிற ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பை நிறைவடைந்த சில மாங்களிலேயே உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் தங்களை உலகக் கோப்பை டி20 தொடருக்காக தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். இருதரப்பு தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடர் போன்றவை உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக அமையவுள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என தென்னாப்பிடிக்க வீரர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். ஆடுகளம் சிறப்பானதாக மாறி வருகிறது. பவுண்டரிகள் சிறிதாகி வருகின்றன. அதனால் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வித்தியாசமான பந்துகளை வீச வேண்டியுள்ளது. டி20 லீக் போட்டிகள் சர்வதேச டி20 போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் எனக்கு கிடையாது. இருப்பினும் தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளேன். இது போன்ற டி20 தொடர்கள் உள்ளூர் வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களிடம் பழகி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வழிவகுக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT