செய்திகள்

2-வது டெஸ்ட்: நியூசிலாந்தின் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை!

போட்டி முடிய இரு நாள்களே இருக்க நியூசியின் வெற்றிக்கு 227 ரன்களே தேவை.

DIN

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 227 ரன்கள் தேவைப்படுகின்றன.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 242 ரன்கள் மற்றும் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டை இழந்து 40 ரன்கள் எடுத்துள்ளது.

போட்டி முடிவடைய இன்னும் இரண்டு நாள்கள் இருக்க நியூசிலாந்தின் வெற்றிக்கு 227 ரன்களே தேவைப்படுகின்றன. டாம் லாதம் 21 ரன்களுடன் களத்தில் உள்ளார். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT