இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா. 
செய்திகள்

3-வது டெஸ்ட்: இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ரோஹித், ஜடேஜா!

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மன் கில் 0 ரன்களிலும், ரஜத் படிதார் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதம் விளாசியும், ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்தும் அசத்தினர். இருப்பினும், ரோஹித் சர்மா 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, ரவீந்திர ஜடேஜாவுடன் சர்ஃபராஸ் கான் ஜோடி சேர்ந்தார்.

தற்போது ரவீந்திர ஜடேஜா மற்றும் சர்ஃபராஸ் கான் களத்தில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

பொறியாளர்கள் பணிக்கான தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

பழந்தமிழரின் காலநிலை அறிவு!

SCROLL FOR NEXT