இந்திய அணியில் அறிமுக வீரராக அசத்திய சர்ஃபராஸ் கானுக்கு முக்கியமான நபர் ஒருவர் விடியோ அழைப்பு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 15) ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்தப் போட்டியில் சர்ஃபராஸ் கான் அறிமுக வீரராக களமிறங்கினார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த நிலையில், அறிமுகப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கானுக்கு அவரது சகோதரர் முஷீர் கான் விடியோ அழைப்பு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சர்ஃபராஸ் கானும் அவரது சகோதர் முஷீர் கானும் விடியோ அழைப்பில் பேசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ வெளியிட்ட விடியோ பின்வருமாறு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.