செய்திகள்

கிரிக்கெட்டிலிருந்து விலகும் பிரபல நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்!

நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனுக்கு ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் எலும்பு முறிவு.

DIN

கிரிக்கெட்டிலிருந்து அடுத்து சில மாதங்களுக்கு கைல் ஜேமிசன் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது கைல் ஜேமிசனுக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து அடுத்து சில மாதங்களுக்கு கைல் ஜேமிசன் விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசனுக்கு ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதைக் காட்டிலும் ஓய்வு என்பது தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் தொடங்குவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், கைல் ஜேமிசன் காயம் ஏற்பட்டு விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT