செய்திகள்

இந்திய அணியுடன் மீண்டும் இணைந்த அஸ்வின்!

அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை திரும்பினார்.

DIN

மருத்துவ அவசரம் காரணமாக சென்னைக்கு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இன்று (பிப்ரவரி 18) இணைந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில், அவர் இந்திய அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். மருத்துவ அவசரம் காரணமாக வீடு திரும்பிய அவர் அணியில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT