செய்திகள்

மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியது என்ன?

இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்திய அணியுடன் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது: போட்டிக்கு முன்னதாக இந்த வாரம் கடினமானதாக இருக்கப் போகிறது எனக் கூறினேன். இங்கிலாந்துக்கு தோல்வியைப் பெற்றுத் தரும் இடத்தில் இருக்க நாங்கள் விரும்ப மாட்டோம்.

இங்கிலாந்து வீரர்களிடத்தில் ஏமாற்றமென்பது கண்டிப்பாக இருக்கும். இன்னும் நமக்கு இரண்டு போட்டிகள் உள்ளன. அணியின் கேப்டனாக அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வருகிற பிப்ரவரி 23 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

SCROLL FOR NEXT