செய்திகள்

ஐபிஎல் தொடங்கும் தேதி அறிவிப்பு!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணத்தால் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கும் எனவும், தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் எனவும் ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை வருகிற மார்ச் 22 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். முதற்கட்டமாக சில போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிடுவோம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றார்.

நடப்பு சாம்பியனாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT